ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்...ஆனால் நடந்தது இதுதான்...!

சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்...ஆனால் நடந்தது இதுதான்...!

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

சட்டமன்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனாலும், ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு கடிதம் அளித்தது. ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் வழக்கம்போல எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். இதனால் எதிக்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். ஆனால், சட்டமன்ற விதிகளைக் கூறி சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் மீண்டும் கூடியது. வழக்கம்போல எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. சட்டமன்றம் ஆரம்பித்ததும் உள்ளே வந்து தனது இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு அருகே அமர்ந்திருந்தார். ஆளுநர் வந்ததும் இருவரும் எழுந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். என்றாலும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல்தான் அமர்ந்துள்ளனர்.

First published:

Tags: Cm edappadi palanisamy, O Panneerselvam, TN Assembly