Home /News /tamil-nadu /

முதல்வராக இருக்கும்போது கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள் - எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு

முதல்வராக இருக்கும்போது கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள் - எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு

ஆர்ப்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி.

ஆர்ப்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி.

ஒரு கிளை கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. அவர் அறிவுரை வழங்கிய கட்சிகள் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய்விட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முதலமைச்சராக இருக்குபோதும், கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள் என முன்னாள் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    மின்கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசியதாவது- பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்த போதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார் பாமகவை மறந்து விட்டார். தேமுதிகவுக்கு போனார் அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார் . தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார் . உங்கள் அறிவுரை எதுவும் வேணாம். நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

    அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு - சிபிசிஐடி மீண்டும் நேரில் விசாரணை

    நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது பல போராட்டங்களை சந்தித்தேன். அரசை நடத்த வேண்டும் அதே வேலையில் வறட்சி ஒரு பக்கம், மழை ஒரு பக்கம். கொரோனா ஒரு பக்கம் என பல்வேறு சோதனைகளை சந்தித்தேன். இது தவிர நம்ம கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள்.

    கடந்த தேர்தலில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தேன். 75 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். நான் ஒரு சாதாரண தொண்டன் ஆனால் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார். அவர்  என்னை எவ்வளவு அவதூறு பேசினாலும் அதை படிக்கட்டுகளாக எண்ணி வெற்றி பெறுவோம்.

    ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு

    ஒரு கிளை கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. அவர் அறிவுரை வழங்கிய கட்சிகள் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய்விட்டது. எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள், மனமில்லை என்றால் புறம் பேச வேண்டாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami

    அடுத்த செய்தி