ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவார திட்டம் மேலும் தாமதமாகிறது...!

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவார திட்டம் மேலும் தாமதமாகிறது...!

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் ஒரு ஆண்டின் அனைத்து நேரத்திலும் ஏரியிலிருந்து கடலுக்கு செல்ல முடியும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் ஒரு ஆண்டின் அனைத்து நேரத்திலும் ஏரியிலிருந்து கடலுக்கு செல்ல முடியும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் ஒரு ஆண்டின் அனைத்து நேரத்திலும் ஏரியிலிருந்து கடலுக்கு செல்ல முடியும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கு துணைக் குழு கொண்டு நேரில் ஆய்வு செய்த பின்னரே திட்டம் பரிசீலிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.

பழவேற்காடு ஏரி திருவள்ளூர் மாவட்டம்.பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் கழிமுகமாகும். 360கிமீ பரப்பளவு கொண்டாதாகும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள 52 கிராமத்தைச் சேர்ந்த 30ஆயிரம் மீனவர்கள் இந்த ஏரியை நம்பி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக ஏரியின் மீன்வளம் வேகமாக குறைந்து வருகிறது. பழவேற்காடு ஏரியின் முகத்துவாரமானது ஒவ்வொரு பருவமழை காலத்தின்போது இந்த முகத்துவரமானது முற்றிலும் தூர்ந்து போகிறது. பருவமழைக்குப் பின்னர் தானாகவே வேறொரு இடத்தில் முகத்துவாரம் உருவாகிறது.இப்படி நிரந்தரமாக முகத்துவாரம் இல்லாத காரணத்தால் ஏரியின் மீன்வளம் குறைந்து மீனவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளானார்கள்.

இதனை தடுக்க 27 கோடி ரூபாய் செலவில் நிரந்தமாக முகத்துவாரம் அமைக்க மீன்வளத்துறை திட்டமிட்டது. இத்திட்டத்தின்படி முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160மீ, வலதுபக்கம் 150மீட்டருக்கு பெரும் பாறைகளை கொட்டி சுவர் அமைக்கவுள்ளனர். இந்த சுவர்களுக்கிடையே 3மீட்டர் ஆழத்திற்கு முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தவுள்ளனர். இதன்மூலம் எல்லா பருவகாலங்களிலும் ஏரியின் முகத்த்துவாரம் கடலோடு திறந்திருக்கும். மொத்தமாக 20,05,150 க்யூபிக் மீட்டர் மணல் அகற்றப்படவுள்ளது.

இரண்டு பக்க சுவர் எழுப்புவதற்கு 1லட்சத்து 27ஆயிரத்து தொள்ளாயுரம் டன் பாறைகள் பயன்படுத்தப்படவுள்ளது.  இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இத்திட்டத்தை பரிசீலித்த  மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு

இத்திட்டத்தால் பழவேற்காடு ஏரிக்கு வலசைக்காக வரும் வெளிநாட்டு பறவைகள் பாதிப்படைய வாய்ப்பிருப்பதால் சலீம் அலி நிறுவனத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

Also read... 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த போவதில்லை - பள்ளிக்கல்வித்துறை முடிவு

ஏரியின் முதத்துவாரம் நிரந்தரமாக திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் ஏரியின் உப்புத்தன்மை குறித்த 10-20 ஆண்டுகளுக்கான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்

திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிக்கான ஒருங்கிணைந்த கடற்கரை பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி...வல்லுனர் மதிப்பீட்டுக் குழுவின் துணைக்குழு ஒன்று இத்திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்து வழங்கும் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் திட்டம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் ஒரு ஆண்டின் அனைத்து நேரத்திலும் ஏரியிலிருந்து கடலுக்கு செல்ல முடியும். மேலும் கடல்நீர் ஏரிக்குள் புகுவதால் இறால் போன்ற மீன்வளமும் அதிகரித்து அப்பகுதி மீனவர்களின் பொருளாதார நிலை உயரும் என்பதால் விரைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது மீனவர்களிம் எதிர்பார்ப்பாக உள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Environment