அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
கோப்புப் படம்
  • Share this:
இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1886-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இதனை மாற்றியமைத்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் அது பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also read: மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்ப பெறவேண்டும் - டி..டி.வி.தினகரன் கண்டனம்


குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டு தொழில் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பை இந்த புதிய வரைவு தடை செய்கிறது என்றும் இதன் மூலம் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading