Home /News /tamil-nadu /

மீண்டும் தமிழகத்திற்கு வரும் ஹைட்ரோகார்பன் திட்டம்?

மீண்டும் தமிழகத்திற்கு வரும் ஹைட்ரோகார்பன் திட்டம்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஏப்ரல் மாதம் முதல் வாரம் 27 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டு இருந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, ஆய்வு செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தாய் நிறுவனமான வேதாந்தா 247 ஹட்ரோகார்பன் கிணறுகளையும், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 67 எண்ணெய் கிணறுகளையும் டெல்டா மாவட்டங்களில் அமைப்பதற்கான அனுமதி கோரி விண்னப்பித்துள்ளன.

    அதில் ஓஎன்ஜிசி நிறுவனம் 40 இடங்களில் ஆய்வுகள் செய்து அறிக்கை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.

    முன்பு நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை எடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதியின் கீழ் ஒரு இடத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளது என கண்டறியப்பட்டால் அங்கு உள்ள அனைத்து இயற்கை வளங்களையும் எடுத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுடன் பகிர்ந்துகொண்டால் போதும் என 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    முன்னதாக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 27 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 40 கிணறுகளுக்கு ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் துறை விதிமுறைகளின் படி 41 ஆய்வுகளை நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் எங்கு எல்லாம் ஹைடோகார்பன் உள்ளது. அதை எடுக்கும் போது ஏற்படும் நன்மை மற்றும் தீமை என்ன என்பது கண்டறிந்து முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Hydrocarbon, ONGC, Vedanta

    அடுத்த செய்தி