ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Also read: தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டையொட்டி தொண்டர்களுடன் சந்திப்பு: கையை அசைத்து வாழ்த்து
இந்தநிலையில், தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரையில் நாளை முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கரோனா ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also read: ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.