ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண் ஸ்டார்ட் அப் நிறுவனர் 32 வயதில் திடீர் மரணம்

பெண் ஸ்டார்ட் அப் நிறுவனர் 32 வயதில் திடீர் மரணம்

கடந்த ஆண்டு தான் பன்குரிக்கு திருமணம் நடந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தான் அவர் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார்.

 • 2 minute read
 • Last Updated :

  பெண்களை மையமாக வைத்து பன்குரி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்த பெண் தொழிலதிபரான பன்குரி ஸ்ரீவஸ்தவா தனது 32 வயதில் திடீரென மரணம் அடைந்தது தொழில்துறையினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரில் பிறந்தவர் பன்குரி ஸ்ரீவஸ்தவா. 32 வயதே ஆகும் பன்குரி, Grabhouse, Pankhuri ஆகிய இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 24) பன்குரி திடீரென மாரடைப்பால் காலமானதாக Pankhuri நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  பன்குரியின் திடீர் மரணம் குடும்பத்தினர் மட்டுமல்லாது சக ஸ்டார்ட் அப் நிறுவனர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிக இளம் வயதில் சாதனை மகுடங்களை தலையில் ஏந்திய பன்குரி மிக விரைவாகவே மரணமடைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் என அவரின் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

  Also read:  130 ஆண்டுகள் பழமையான டைம் கேப்சூல்.. சிலையின் பீடத்திற்கு கீழே கண்டுபிடிப்பு

  கடந்த ஆண்டு தான் பன்குரிக்கு திருமணம் நடந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தான் அவர் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார்.

  பன்குரி தொடங்கிய ரெண்டல் ஸ்டார்ட் அப் ஆன Grabhouse-ஐ பிரபல ஆன்லைன் கிளாசிஃபைட் நிறுவனமான Quikr கடந்த 2016ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதன் பின்னர் பெண்களை மையமாகக் கொண்டு அவரின் பெயராலேயே Pankhuri என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அவர் தொடங்கினார். இது பெண்களுக்கிடையே வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்கும், அவர்களுக்குள் சாட் செய்வதற்கும், கற்பதற்கும், சிறிய அளவிலான படிப்புகளை கற்பதற்கும், லைவ் ஸ்டீமிங் வாயிலாக ஷாப்பிங் செய்வது என ஏராளமான வசதி வாய்ப்புகளை பெண்களுக்கு ஏற்படுத்தி தரும் பெண்களுக்கான பிரத்யேக சமூக தளமாக இருந்து வருகிறது.

  Also read:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

  Pankhuri ஸ்டாரட் அப் நிறுவனத்தில் அமெரிக்காவின் பிரபல Sequoia Capital முதலீடு செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குனர் ஷைலேந்திர சிங் கூறுகையில், பன்குரி ஏராளமான யோசனைகள், நுண்ணறிவு கொண்டிருந்தார். ஒரு நிறுவனராக உற்சாகம் மற்றும் படைப்பாற்றல் நிறைந்த அவரின் மிகப்பெரிய இழப்பை எங்களால் கிரகிக்க முடியவில்லை. இதயம் நொருங்கிவிட்டது” என தெரிவித்தார்.

  பன்குரியின் திடீர் மறைவுக்கு ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  First published: