சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் - கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு

சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் - கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தமிழக டி.ஜி.பி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பினார். அதில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார்.

    அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து வந்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், சென்னைக்கு காரில் திரும்பும்போது உயர் அதிகாரி என்பதால், மாவட்ட எல்லையில் மரியாதை நிமித்தம் அவரை வரவேற்றபோது காரில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி புகார் அளித்தது ஊடகங்களில் செய்தியாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாகா கமிட்டி அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த ஆறு பேர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் இருப்பார். அதில் உறுப்பினர்களாக கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டி.ஜ.ஜி சமூண்தேஷ்வரி, டி.ஜி.பி அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, சர்வதேச நீதி அமைப்பின் தலைவர் லோரீட்டா ஜோனா ஆகிய ஐவரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: