MK Stalin: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்.
மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கும் வகையில், “எண்ணும் எழுத்தும்“ என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் அடைந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை தேர்வுசெய்வதற்காக அரசியல் கட்சிகளுடன் பாஜக சார்பில் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிப்பு.
தமிழ்நாடு முழுவதும் 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடியவுள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
சனாதன தர்மம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்டதாக கருதப்படும் போகேஷ்வர் என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
வைகாசி விசாகத்தையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தை ஒட்டி உற்சவ மூர்த்திகளுக்கு, வரும் 14-ம் தேதி புதிய தங்கக் கவசம் பொருத்தப்பட உள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான பாதிப்புகளால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யக்கோரி உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது.
உணவு தானிய இருப்பு விவகாரத்தில் இந்தியாவை எந்த நாடும் அடிபணிய வைக்க முடியாது என்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என ரஷ்ய தூதரக அதிகாரி கூறியுள்ளார்,
இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டிகளுக்கு வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் கிடைக்காவிட்டால், ரஷ்யாவிடம் இருந்து வாங்குவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
திபெத்தில் இன்று அதிகாலையில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆந்திர மாநிலம் போன்று திரையரங்கில் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு முறையை, தமிழக அரசு ஒழுங்குமுறைபடுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசனை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கவுரவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமைக்கான போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 43 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அளவுக்கு முதல் நாளில் ஏலம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Must Read : அனைத்து சாலைகளும் சென்னையை நோக்கி... விடுமுறை முடிந்து திரும்பியவர்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ், டுடி சந்த், தனலட்சுமி, சராபானி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்றது.
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.