தருமபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 13 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவியை கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்கின்ற ஆங்கில ஆசிரியர், இரு சக்கர வாகனத்தில் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், காேம்பூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர்.
அப்பொழுது அயோத்தியபட்டினம் பகுதியில் குற்றப்பிரிவு காவலர்கள் உதவியுடன் மொரப்பூர் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார்.
Must Read : கஞ்சா போதையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. தாய் மகளுக்கு கொலை மிரட்டல் - கன்னியாகுமரியில் நடந்த கொடூரம்
இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள முபாரக்கை, மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.