ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி: அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி: அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு
மாதிரிப் படம்
  • Share this:
காது, மூக்கு, தொண்டை, கண், மற்றும் பல் மருத்துவத்தில் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன் பின் இந்த சிகிச்சைகளை அவர்கள் சட்டப்படி மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை ஆயுர்வேத மருத்துவர்கள் வரவேற்கின்றனர். உலக சுகாதார நிறுவன அளவுகோல் படி 1,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 1,400 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் உள்ளார். எனவே மருத்துவர் பற்றாக்குறையை தவிர்க்க இது நல்ல முடிவு ஆகும். அலோபதி மாணவர்கள் படிக்கும் உடல் சார்ந்த அடிப்படை படிப்புகளை ஆயுர்வேத மருத்துவர்களும் படிக்கின்றனர். எனவே சிறப்பு பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்கள் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தயாராகிவிடுவார்கள் என யோகா மற்றும் இயற்கை மருத்துவ முதுநிலை மருத்துவர் தியாகராஜன் தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த முடிவு ஆபத்தானது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சில மாதங்கள் பயிற்சி பெற்று அறுவை சிகிச்சை செய்வது மக்களுக்கு ஆபத்தானதாக முடியும். மருத்துவத்தின் தரம் குறையும்.
அவரவர் வேலையை அவரவர் செய்யட்டும். அரசு இந்த முடிவை தொடர்ந்து முன்னெடுத்தால் இந்திய மருத்துவ சங்கம் தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading