பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - பொதுக் கலந்தாய்வு வரும் 10-ம் தேதி தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - பொதுக் கலந்தாய்வு வரும் 10-ம் தேதி தொடக்கம்

கோப்புப் படம்

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி‌.அன்பழகன் வெளியிட்டார்.

 • Share this:
  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கான தரவரிசைப் பட்டியலை பார்த்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘பொறியியல் படிப்பிற்காக பதிவு செய்தவர்கள் :1,60,834. பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் : 1,31,436. சான்றிதழ் பதிவேற்றம் செய்து சரி பார்த்தவர்கள் :1,15,088. தகுதியான மாணவர்கள் :1,12,406.

  இந்த ஆண்டு 461 கல்லூரிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு 27 கல்லூரிகள் மூடுவதற்கான அனுமதி கேட்டுள்ளது. அதேபோல் 8 கல்லூரிகள் புதிதாக திறப்பதற்கான அனுமதி கேட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இணை கல்லூரிகளில் சேர்ந்து தான் புது பல்கலைக்கழகம். மாநில நிதிகளின் மூலமாகவே அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த இரண்டு பல்கலைக் கழகமாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை தேடி போவதைவிட வேலைவாய்ப்பை கொடுக்கும் வகையில் நமது மாணவர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை நம் மாணவர்கள் தமிழகத்தில் வேலை கொடுக்கும் வகையில் தொழில் தொடங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்க முடியவில்லை என்பது தவறான தகவல். தவறு ஏற்பட்டால் அதை கேட்க கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு நடைபெற்றுள்ளது. அதன் தொகுப்பு வந்தவுடன் சாதகமாக இருப்பதை அரசு ஏற்கும். பாதகமாக இருப்பதை நீக்கக் கோரி மத்திய அரசிற்கு வலியுறுத்துவோம். அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக முப்பதாம் தேதி வழக்கு வருகிறது. யுஜிசி மற்றும் AICTE என்ன வழிகாட்டுதல் கூறுகிறதோ அதனை பின்பற்றி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல கல்லூரிகள் Corona சிறப்பு மையமாக செயல்பட்டு வருவதால் அவற்றில் எந்தெந்த கல்லூரிகள் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ஆய்வு எடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி முடிந்த பிறகு எந்தெந்த கல்லூரிகளை திறக்க சாத்தியம் இருக்கிறது என்பது குறித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

  அதேபோல கலந்தாய்விற்கான தேதியையும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.


  மாற்றுத்திறனாளிகள் முன்னாள் படைவீரர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு - 1/10/2020 - 5/10/2020 வரை

  பொது கலந்தாய்வு 8/10/2020 - 27/10/2020 வரை நான்கு கட்டமாக நடைபெறும்.

  SCA - SC கலந்தாய்வு 29/10/2020 - 30/10/2020 வரை நடைபெறும்.

  இந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
  Published by:Karthick S
  First published: