பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு - ஜூன் 10-ஆம் தேதி துவங்க இருப்பதாகத் தகவல்..!

தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு - ஜூன் 10-ஆம் தேதி துவங்க இருப்பதாகத் தகவல்..!
பொறியியல் கலந்தாய்வு
  • Share this:
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி பொறியியல் கலந்தாய்விற்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. இந்த ஆண்டு ஊரடங்கின் காரணமாக ஜூன் மாதம் 10-ஆம் தேதி துவங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கு தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. ஆன்லைனில் பதிவு செய்ய மாணவர்களுக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading