அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான புத்தக காட்சியை துணைவேந்தர் வேல்ராஜ் துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்றார்.
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தமிழ் வழியில் பொறியியல் படிப்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும். அது வருங்காலத்தில் தொழில் நிபுணர்களாக வருவதற்கு வழிவகுக்கும். ஜெர்மனி,ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் தாய்மொழிக் கல்வியில் தான் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலாம் ஆண்டு நேரடி வகுப்பு ஒரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Online class