ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் : டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறையினர் 11 மணிநேரம் விசாரணை

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் : டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறையினர் 11 மணிநேரம் விசாரணை

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

TTV Dhinakaran : இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறையினர் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக சுகேஷ் சந்திர சேகர் என்கிற இடைத் தரகர் மூலமாக லஞ்சம் கொடுத்ததாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மீது கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு டிடிவி தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை  தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறை, தினகரனுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தினகரனிடம், சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

  இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகரின் மாறுபட்ட வாக்குமூலம் காரணமாக தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராவேன் என்றும் தெரிவித்தார்.

  Must Read : திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!

  மேலும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் டிடிவி தினகரன் அப்போது கூறினார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: AMMK, TTV Dhinakaran