அமலாக்கத்துறை முன் ஆஜராக அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில் 33 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 2.8 கோடி ரூபாய் மோசடி செய்தாக புகார்.

  • Share this:
    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர், போக்குவரத்துறையில் 33 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 2.8 கோடி ரூபாய் மோசடி செய்தாக அவர் மீது போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

    சென்னை போலீசாரின் வழக்கு அடிப்படையில்,  அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் ​மதுரை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்தனர்.

    அதில் அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    Must Read : நியூஸ் 18 செய்தி எதிரொலி, காலாவதியான பொருட்களை விற்றுவந்த பல்பொருள் கடைக்கு அதிகாரிகள் சீல்

    அந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், முறைகேடான பணபரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கடந்த வாரம் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க இருப்பதால் விலக்கு கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: