ஆசை தம்பி முதல் சேலம் கதிர்வேல் வரை: தமிழ்நாடு போலீசாரின் என்கவுண்டர் லிஸ்ட்!

கோப்புப் படம்

தமிழகத்தில் ரவுடி ஆசை தம்பி முதல் சேலம் கதிர்வேல் வரை தமிழ்நாடு போலீசார் இதுவரை செய்த என்கவுண்டர்களின் தொகுப்பு ஒரு பார்வை.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சேலத்தில் இன்று ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தமிழக்த்தில் நடந்த என்கவுண்டர்கள் ஒரு பார்வை.

  தமிழகத்தில் கடந்த 1998-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின்போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  2002-ம் ஆண்டு தமிழக காவல்துறையினர் பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  2003-ம் ஆண்டு தூத்துக்குடியில், வெங்கடேச பண்ணையார் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரை செய்தது, அப்போது அதிரடி படைக்கு தலைமை தாங்கிய விஜயகுமார் ஐபிஎஸ், வெள்ளைத்துரை.

  2007-ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

  2010-ம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகி, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட ட்ரைவர் மோகன் ராஜ் என்கவுண்டரில் கொல்லைப்பட்டார்.

  2010-ம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி மற்றும் கூடுவாஞ்சேரி வேலுவை போலிசார் சுட்டுக் கொன்றனர்.

  2012-ம் ஆண்டு சிவகங்கை, காவலர் ஆல்பின் சுதனைக் கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர் . மேலும் அதே ஆண்டில் சென்னை, வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் என்கவுண்டரில் கொன்றனர்

  2015-ம் ஆண்டு போலீஸ் என்கவுண்டர்கள் அனைத்தும் கொலைகள் என்று கருத முடியாது  என்று உயர்நீதிமன்றம் ஒரு கருத்தை தெரிவித்திருந்தது.

  2017-ம் ஆண்டு ஜனவரியில் சிவகங்கை ரவுடி கார்த்திகைச்செல்வனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்தில், ரவுடி கோவிந்தனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

  2018-ம் ஆண்டு மார்ச் 1-ல் மதுரை ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜூலை மாதம் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன். தரமணியில் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

  இதனை தொடர்ந்து இன்று சேலம் கரியாப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: