ஃபோர்டு தொழிற்சாலையே வேறு நிறுவனம் எடுத்து நடத்த நடவடிக்கை வேண்டும் - தொழிற்சங்கம் வலியுறுத்தல்

மாதிரிப் படம்

செங்கல்பட்டு ஃபோர்டு கார் தொழிற்சாலையை வேறு நிறுவனத்துக்கு விற்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் செந்தில்குமார் கோரிக்கைவைத்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு மகிழுந்து நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் மகிழுந்து ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்து உள்ளது. குஜராத் ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், சென்னை ஆலை அடுத்த ஆண்டிலும் மூடப்படவுள்ளன.

  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தொழிற்சாலைப் பகுதிகளில் இயங்கி வரும் ஃபோர்டு கார் தொழிற்சாலை சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 2,700 பேர் பணியாற்றி வருகின்றனர் மற்றும் ஆறு நூறு பேர் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றனர். செலக்ட் தொழிற்சாலையில் 1,500 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

  தொழிற்சாலையை நம்பி 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களும் வேலை இழப்பை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இந்த தொழிற்சாலையை வேறு கம்பெனிக்கு மாற்றம் செய்து அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திக்கொள்ளும்படி தொழிற்சங்கம் சார்பாக கேட்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு செய்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். மேலும் நாளை 13-தொழிற்சாலைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொழிற்சாலையில் முப்பதாயிரம் கார் உற்பத்தி செய்ய வேண்டிடும் என்று ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: