மாதாந்திர கடன் தவணையை செலுத்த கால அவகாசம்...வங்கியாளர்களுடன் அமைச்சர் பி.டி.ஆர் ஆலோசனை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார்.

 • Share this:
  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தவனையை செலுத்த கால அவகாசம் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

  தமிழநாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவரம் அடைந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், கால் டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தவனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

  Also Read : நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்: விளாசும் பாஜகவின் நிர்மல் குமார்!

  கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, தொழில் மற்றும் வணிக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், கால் டாக்சி, வாகனம் வைத்திருப்பவர்களின் கடன் சுமையை குறைக்கும் வகையில் அவர்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணை தொகையை கட்டுவதற்கு 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

  Also Read : முதல்வர் ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு அரசியல்: அரசுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?

  இந்நிலையில் சிறு குறு நிறுவனங்கள் வங்குகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தவனை செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Vijay R
  First published: