• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை: முகாமில் யானைகள் உற்சாகம்!

தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை: முகாமில் யானைகள் உற்சாகம்!

முகாமில் யானை

முகாமில் யானை

நாள் தோறும் பசுந்தீவனங்கள் மற்றும் சமச்சீர் உணவுகளை ருசி பார்க்கும் யானைகள், தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசித்தும் பரவசமடைகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேக்கம்பட்டி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் உள்ள யானைகள் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றன. யானைகள் சிறப்பு திறமைகளை வெளிப்படுத்துவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முகாம் நடைபெற்று வருகின்து.

இந்த முகாமில் மொத்தம் 27 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. முகாமில் கலந்து கொண்ட யானைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.

குளிர்காற்று வீசும் காலைவேளை மற்றும் மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. வயது உடல் எடைக்கேற்றாற்போல் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

நடைபயிற்சிக்குப்பின்னர் பாகன்கள் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரிசி சாதம் கொள்ளு பசுந்தீவனங்கள் பழங்கள் அஷ்டசூரணம்  பயோபூஸ்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.

நாள் தோறும் பசுந்தீவனங்கள் மற்றும் சமச்சீர் உணவுகளை ருசி பார்க்கும் யானைகள், தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசித்தும் பரவசமடைகின்றன. எதிரிகளோடு சண்டையிடுவது போல் ஆவேசமாக கம்பு சுற்றியும் அசத்துகிறது படவேடு ராமர் திருக்கோவில் யானை லட்சுமி.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: