யானையைப் புதைத்துவிட்டு தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு!

யானையைப் புதைத்துவிட்டு தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு!
யானையைப் புதைக்கும் வனத்துறையினர்
  • Share this:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

மத்தேட்டிப்பள்ளி என்னுமிடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியார் இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் யானைகள் பயிர்களை  அழிப்பது தொடர்கதையாக இருந்துள்ளது.

இதைத் தடுக்க பிச்சாண்டி அமைத்த மின்வேலியில், நேற்று ஒரு ஆண் யானை சிக்கி உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிச்சாண்டி அந்த நிலத்திலேயே யானையைப் புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.


தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களுடன் சென்று யானையைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் யானையை அந்த இடத்திலேயே புதைத்துவிட்டு, பிச்சாண்டியைத் தேடி வருகின்றனர்.

Also see:
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading