Home /News /tamil-nadu /

நிறைவடைந்தது யானைகள் நல்வாழ்வு முகாம்... சொந்த ஊர் திரும்பிய யானைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்பு...

நிறைவடைந்தது யானைகள் நல்வாழ்வு முகாம்... சொந்த ஊர் திரும்பிய யானைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்பு...

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்த யானை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்த யானை

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வந்த நலவாழ்வு முகாம் நிறைவடைந்த நிலையில் யானைகள் சிறப்பான உபசரிப்புடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேக்கம்பட்டி பவானியாற்றின் கரையோர பகுதியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 8 ம் தேதி துவங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் பங்கேற்றன.

    சமச்சீர் உணவுகள், பசுந் தீவனங்கள், நடை பயிற்சி மற்றும் ஷவர் பாத் குளியல் உள்ளிட்டவை மூலம் யானைகள் புத்துணர்ச்சியுடன் பராமரிக்கப்பட்டன. 48 நாட்கள் நடைபெற்ற புத்துணர்வு முகாம் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் யானைகளுக்கு ருசியான பழங்களை வழங்கி அதனுடைய சொந்த ஊர்களுக்கு லாரியில் அனுப்பி வைத்தனர்.

    யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு சென்றிருந்த மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, முகாம் முடிவடைந்து கோயிலுக்கு திரும்பியது. அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்த யானைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்த யானை


    மேலும் படிக்க..ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்: நடிகை குஷ்பு



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Elephant, Elephant rejuvenation camp, Tamil Nadu

    அடுத்த செய்தி