ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குட்நியூஸ்... மின்சாரம் இன்று மாலை முதல் தடையின்றி வழங்கப்படுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

குட்நியூஸ்... மின்சாரம் இன்று மாலை முதல் தடையின்றி வழங்கப்படுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

Senthil balaji: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716மெகாவாட் மின்சாரம் கிடைக்காததே மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  முதல்வரின் சீரிய நடவடிக்கையால்,  இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில், இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

  இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716மெகாவாட் மின்சாரம் கிடைக்காததே மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்.

  தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், அதற்கு குறைவான நிலக்கரி மட்டுமே கிடைப்பதும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில்,  முதல்வரின் சீரிய நடவடிக்கையால்,  இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்

  இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Power cut, Senthil Balaji