Home /News /tamil-nadu /

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் எவ்வளவு?

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் எவ்வளவு?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கட்டண உயர்வு எவ்வளவு?

    2 மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ரூ.55 உயர்வு

    இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.155 அதிகரிப்பு

    400 யூனிட்கள் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.295 உயா்த்தப்பட்டுள்ளது

    மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

    500- 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால் இரண்டு மாதங்களுக்கு ரூ.310 உயர்வு

    700 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.550 அதிகரிப்பு

    800 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.790 உயர்வு

    900 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,130 அதிகரிப்பு

    மின் கட்டண உயர்வு


    இனி ஒரே மின் கட்டணம்

    வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் அதே விலையில் தான் கணக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Electricity, Electricity bill, Tamilnadu

    அடுத்த செய்தி