Home /News /tamil-nadu /

மின் கட்டணஉயர்வு: நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளக்குவதா? அண்ணாமலை கேள்வி

மின் கட்டணஉயர்வு: நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளக்குவதா? அண்ணாமலை கேள்வி

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளக்குவதா? அண்ணாமலை

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளக்குவதா? அண்ணாமலை

சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்கிறது.

    நுகர்வோர்களே 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு வகைகளிலும் தமிழகத்தில் மின் கட்டண உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



    இந்நிலையில், தமிழக அரசின் இந்த மின் கட்டணஉயர்வை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.

    நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளக்குவதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்,
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, TNEB

    அடுத்த செய்தி