POWER CUT: வீட்டில் இருந்து அலுவலக பணி செய்வோர் நலன்கருதி, மின்தடை செய்யப்படாது - தமிழக அரசு அறிவிப்பு

வீட்டில் இருந்து வேலை செய்வோர்

முழு ஊரடங்கால் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு, தேர்வு காரணமாக ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான அலுவலக ஊழியர்கள்  தங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். இவர்களின் பணிகளில் தடையேதும் வந்துவிடாதபடி,  பராமரிப்புக்காக மின்சாரத்தை நிறுத்தாமல் தடையின்றி வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    அத்துடன், மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறுவதாலும் தடையின்றி மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவது ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Also read... Lockdown : தமிழகத்தில் குறையும் நோய் தொற்று.. அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும்?

    தற்பொழுது தவிர்க்க முடியாத மிகவும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மின்சார பராமரிப்புக்காக 2 மணி நேரம் மட்டுமே மின்தடை இருக்கும் என்று அரசு கூறியிருந்த நிலையில், வருகின்ற 7ம் தேதி வரை முற்றிலும் மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: