ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம்? கடுமையான எச்சரிக்கை கொடுத்த மின்வாரியம்!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம்? கடுமையான எச்சரிக்கை கொடுத்த மின்வாரியம்!

மாதிரி படம்

மாதிரி படம்

உணவு இடைவெளியின்றி பணியாற்றவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

வரும் டிசம்பர் 31ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், மின் வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில் அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு முகாமுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
கணினியில் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்
காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இடைவெளியின்றி பணியாற்ற உத்தரவு
First published:

Tags: Aadhar, EB Bill