ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''லன்ச் பிரேக் இல்லை.. கம்ப்யூட்டர் ரெடியா இருக்கணும்..'' ஆதார் இணைப்பில் மின்வாரியம் முக்கிய உத்தரவு

''லன்ச் பிரேக் இல்லை.. கம்ப்யூட்டர் ரெடியா இருக்கணும்..'' ஆதார் இணைப்பில் மின்வாரியம் முக்கிய உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

மின்வாரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கணினியில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவதற்கு மாற்று கணினி தயாராக வைத்திருக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

வரும் டிசம்பர் 31ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், மின் வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில் அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு முகாமுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
கணினியில் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும்
காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இடைவெளியின்றி பணியாற்ற உத்தரவு
First published:

Tags: Aadhaar card, Aadhar, EB Bill