ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா?

ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா?

மாதிரி படம்

மாதிரி படம்

Electrical workers | ஏற்கனவே கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஊழியர்கள் நூதன முறையில் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க | மின் கட்டண உயர்வு கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

First published:

Tags: Electricity, Government Employees, Tamilnadu, Workers Strike