இனி வழக்கம் போல் மின் கணக்கிடும் பணிகள் நடைபெறும் - மின்சார வாரியம்

மின் கட்டணம்

மின் கணக்கீடு செய்யும் பணிகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் மின் கணக்கிடும் பணிகள் இனி வழக்கம் போல் நடைப்பெறும் என மின்வாரியம் ஆணை வெளியிட்டுள்ளது.

  தமிழகத்தில் கடந்த சில மாதங்கள் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்தன் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், முந்தைய மாத மின் கட்டணம், குறிப்பிட்ட மாதத்துக்கான 2019ம் ஆண்டு செலுத்திய கட்டணம் அல்லது கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் வழங்கியிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சலுகைகள் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 16-ம் தேதி முதல் மின் கணக்கீடு செய்யும் பணிகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் எனவும், இனி வழக்கம்போல் மின் கட்டணம் கணக்கீடு செய்து, அதற்கான தொகையை செலுத்தும் பழைய நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: