மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசின் மின்வாரியம் ஒப்புதல் கேட்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முறையும் தொடர்கிறது.
இலவச மின்சாரத்திற்காக ஆண்டிற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை, மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது.
திமுக சதி...வெற்றி பெறுவோருக்கு உடனுக்குடன் வெற்றி சான்றிதழ்: அண்ணாமலை வலியுறுத்தல்
இந்நிலையில், ஒரே நபர் இரண்டு, மூன்று மின் இணைப்புகள் மூலம் மானியம் பெற்று பயனடைவதாக மின்வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் முறைகேடுகளை கண்டறிய முடியும் என முடிவெடுத்துள்ள மின்வாரியம், இதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.