Home /News /tamil-nadu /

புதிய மின் கட்டணம் : 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஆறுதலான தகவல்

புதிய மின் கட்டணம் : 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஆறுதலான தகவல்

மின் கட்டணம்

மின் கட்டணம்

மின் கட்டண உயர்வு : மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1.786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில்500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஆறுதலான தகவலை மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

    மின்‌ கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறி, மாற்றப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்களை தெரிவித்தார்.

    வருவாய் மற்றும் கடன் சுமைகளை சுட்டிக் காட்டிய அமைச்சர், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்து வேறு வழியில்லை என்று குறிப்பிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டண விபரங்களை தெரிவித்தார்.

    இதன்படி, 42 சதவீத வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்த மின்  கட்டணத்திலும், 100 யூனிட் இலவச மின்சாரத்திலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    நிலைக் கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு நுகர்வோர் பலன் அடைவார்கள்.

    தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1.786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட்கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சரின் இந்த அறிவிப்பால், 500 யூனிட்டிற்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு முந்தைய கட்டணத்தைப் போன்று அதிக கட்டணம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Electricity bill

    அடுத்த செய்தி