முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக மின் கட்டணம் கணக்கீடு

மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக மின் கட்டணம் கணக்கீடு

மின்கட்டணம்

மின்கட்டணம்

கொரோனோ குறைந்துள்ள நிலையில் நேரடியாக மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய பணிகள் துவங்கி விட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்த மாத மின் கட்டணம் திடீரென 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள், பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 கொரோனோ உச்சத்தில் இருந்ததால்  கடந்த மே மாதம் நேரடியாக மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய முடியவில்லை இதனால் மூன்று வழிமுறைகளில் மின் கட்டணம் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்தது

A. 2019 மே மாதம் செலுத்திய தொகை எவ்வளவு அதை அப்படியே செலுத்தலாம்

B. 2021 மார்ச் மாதம் செலுத்திய தொகையை செலுத்தலாம் அல்லது

C.மின் பயன்பாட்டு அளவை நீங்களே கணக்கீடு செய்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனோ குறைந்துள்ள நிலையில் நேரடியாக மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய பணிகள் துவங்கி விட்டது.

Also Read:  ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டு தகவல்களைத் திருடி நூதனக் கொள்ளை: 3 பேர் சிக்கியது எப்படி

அதாவது 2021 மார்ச் மாதத்திற்கு பிறகு தற்போதுதான் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால் 4 மாதத்திற்கு மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்யக்கூடிய நிலை உள்ளது. நான்கு மாதத்திற்கு மொத்தமாக பயன்படுத்திய மின் அளவீட்டை கணக்கீடு செய்து.  அதில் எத்தனை யூனிட் பயன்பட்டு இருக்கிறதோ அதை பாதியாக பிரித்து 2 மின்கட்டண அளவை தெரிவிப்பார்கள்

கடந்த மாதம் செலுத்திய தொகையை இந்த தொகையிலிருந்து கழித்து விட்டு மீதம் உள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும். உதாரணத்திற்கு 1000 யூனிட் 4 மாதத்திற்கு பயன்படுத்தியிருந்தால் 500 , 500 என இரண்டாக பகிர்ந்து ஏற்கனவே உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற சலுகையை வழங்கி மீதமுள்ள மீன் அளவுக்கு தொகை வழங்கப்படும்.

Also Read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

உதாரணத்திற்கு கடந்த மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி இருந்தால் இதில் வரக்கூடிய தொகையில் கட்டணம் திரும்ப பெறப்படும். ஆனால் தற்போது 4 மாத க கணக்கீடு செய்வதால்  அதிக தொகை வருவதாகும் மக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து கணக்கீடு செய்யப்படும் பொழுது நேரடியாக மின் பயன்பாட்டு கணக்காளர்கள் மக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் மே மாதம் அதிக வெப்பம் நிலவுவதால் மின் பயன்பாடு அதிகம் இருக்கும் எனவே இந்த ஒரு வருடத்தில் அதிக கட்டணம் செலுத்துவது மே மாதம் தான். எனவே அது மக்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி விட்டதாக கருதுகின்றனர் என விளக்கம் தருகின்றனர்.

உதாரணமாக ஏப்ரல் மே ஜீன் ஜீலை உள்ளிட்ட 4 மாதத்தில் 1000 யூனிட் பயன்படுத்தி இருந்தால் அதனை 500, 500 என்ற இரண்டு கணக்குகளாக பிரிந்து 1100 , 1100 = 2200 தொகை செலுத்த வேண்டும் கடந்த மே மாதம் உதாரணமாக நீங்கள் 2019 மே மாதம் கட்டிய தொகையை 890 செலுத்தி இருந்தால் 2200 இருந்து 890 கழித்து 1310 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு தான் கணக்கீடு செய்யப்படுகிறது என மின்வாரிய ஊழியர்கள் சொல்கின்றனர்

ஆனால் பெரும்பாலும் ஏப்ரல்,மே, ஜூன், ஜூலை உள்ளிட்ட 4மாதம் 1000 யூனிட் பயன்படுத்தி அதனை ஒரே கணக்காக கணக்கீடு செய்தால் 5030 ரூபாய் வரும் எனவே அவ்வாறு கணக்கீடு செய்து மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: EB Bill, EB workers, Electricity, Electricity bill, TNEB