முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் 15-ம் தேதி துவங்கப்பட்டது. 2கோடியே 67 லடசம் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் இருந்தது. பின்னர் இது வரும் 31-ம்தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 30ம் தேதி வெளியாகலாம் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Aadhaar card, Electricity bill