Home /News /tamil-nadu /

மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji | 1.59 லட்சம் கோடி கடன் வாங்கி ஏற்படுத்திய மாநில அரசு மின்சார துறை கட்டமைப்பை தனியார் துறைக்கு தூக்கிக் கொடுக்கும் முயற்சி இது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார்.  ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும் என கூறினார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலு கடுமையாக நாடாளுமன்றத்தில் இன்று மசோதாவை எதிர்த்து திமுகவின் குரலை பதிவு செய்தார் என்றும் இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என கூறினார்.

மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்திறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம். குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவசம் மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும் என்றார்.

மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது என விமர்சித்தார்.

Also Read : கவர்னரை சந்தித்த ரஜினி - அரசியலும் பேசியதாக கூறியதால் பரபரப்பு

மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக, பாஜக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை என்றும் மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான். நிச்சயம் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி தான் இது என்றார்.

இந்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து முழு குரல் எழுப்பும் என்றும் மாநில அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் எந்த அதிகாரமும் இருக்காது. மின்சாரத் துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

Also Read : திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்

முதலாளிகள் கையில் சென்றால் ஏழை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என எந்த சரத்தும் மசோதாவில் இடம் பெறவில்லை என குறிப்பிட்டார்.

சொந்த காசில் ஒருவர் கார் வாங்கினால் டீசல் அடித்து காரை இன்னொருவர் ஓட்டி செல்கிறேன் என்று சொல்லும் போக்கு இது. முதலமைச்சர் இந்த மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றார்.

ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு மிக விரைவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Electricity, India, Senthil Balaji

அடுத்த செய்தி