முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் மாளிகை அரண்மனை வாரிசுகளை உருவாக்குதில்லை என்பதில் பெருமையே - மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு ஆளுநர் தமிழிசை பதில்

ஆளுநர் மாளிகை அரண்மனை வாரிசுகளை உருவாக்குதில்லை என்பதில் பெருமையே - மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு ஆளுநர் தமிழிசை பதில்

சு. வெங்கடேசன் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

சு. வெங்கடேசன் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா என்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் கருத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக மக்கள் திறமையானவர்களை அங்கீகரிப்பதில்லை என சில தினங்களுக்கு முன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் ட்விட்டர் பதிவில், ‘ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆளுநர் தமிழிசை தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.

தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். இறுமாப்பு வேண்டாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து இல. கணேசன், தமிழிசை சௌந்தரராஜன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெறாமல் ஆளுநராகியுள்ளது பல விமர்சனங்களை பெற்ற நிலையில் தமிழிசை மற்றும் சு. வெங்கடேசன் இடையே இந்த மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் ஈரோடு கிழக்கு பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பன்னீர் செல்வம் விரைவில் ஆளுநராக செல்வார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Governor, Su venkatesan, Tamilisai Soundararajan