இரவோடு இரவாக ஜெயலலிதா பேனரை அகற்றிய அதிமுகவினர்: முன்னுதாரணம் என பொதுமக்கள் பாராட்டு

இரவோடு இரவாக ஜெயலலிதா பேனரை அகற்றிய அதிமுகவினர்: முன்னுதாரணம் என பொதுமக்கள் பாராட்டு

ஜெயலலிதா பிறந்தநாள் பேனர்கள் அகற்றம்

மயிலாடுதுறையில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு வைத்த பேனர்களை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உட்பட்டு தானாக முன்வந்து அகற்றி, அரசியல் கட்சியினருக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர் மயிலாடுதுறை அதிமுகவினர்.

 • Share this:
  தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவினர் தாங்கள் வைத்த விளம்பர பதாகைகளை இரவோடு இரவாக அகற்றினர்.

  அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததின விழாவிற்காக அதிமுக சார்பில் அரசு மருத்துவமனை சாலை, கேணிக்கரை திருவிழந்தூர் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர்.

  பொதுவாக பேனர்களை விதிமுறைக்கு மாறாக வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினர் அல்லது காவல்துறையினரின் புகாரின் அடிப்படையில் அவற்றை அகற்றுவது வழக்கம். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, இரவோடு இரவாக அதிமுகவினர் பேனர்களை அகற்றி வருவது அரசியல் கட்சியினருக்கு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க...  Tamil Nadu Election 2021 | தென்மாவட்டங்களில் மூன்று நாள் பிரசாரம்: ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: