ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று வருங்காலத்தில் மக்கள் உணர்வார்கள் - தமிழிசை

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  மக்கள் தவறான முடிவை எடுத்து விட்டனர். தமிழகத்தில் வெற்றி கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வேம். என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

  36 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியின் விளிம்பில் உள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசுகையில், “பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

  வாக்களிக்காத மக்களும் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை வருங்காலத்தில் உணர்வார்கள். எது எப்படி இருந்தாலும் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல திட்டங்களை தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்தார்கள்.

  தோல்வியடைந்தாலும் தூத்துக்குடி மக்களுக்கு எனது சேவை தொடரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் மக்கள் தவறான முடிவை எடுத்து விட்டனர். தமிழகத்தில் வெற்றி கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வேம்” என்று கூறினார்.

  Published by:Sankar
  First published: