ELECTION OFFICER EXPLAINS REGARDING INCOME TAX RAID SKD
வருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைக்கும் தகவல்படி சோதனை செய்கிறது - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம்
சத்ய பிரதா சாகு
வருமான வரித்துறை, அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிர சாஹூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர்களாக 3,998 களத்தில் உள்ளனர். அதில், ஆண்கள் 3,585, பெண்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2. புதிய வாக்காளர்களுக்கு இந்த மாதம் 30 தேதிக்குள் வாக்களர் அடையாள அட்டை speed post மூலம் அனுப்பிவைக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குசாவடிகள் உள்ளன. மிகவும் பதற்றமான வாக்குசாவடியாக 300 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளாக 10,528 வாக்குச்சாவடிகள் அறியப்பட்டுள்ளன. வேட்ப்பாளர்கள், அரசியல் கட்சியகளுடன் அலோசித்த பிறகு பதற்றமான வாக்குசாவடிகள் அதிகரிக்கலாம். 44,758 Web stream(நேரலை) கொடுக்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையையை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் தேர்தலுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பது பின்னர்தான் தெரியவரும். தேர்தல் சம்பந்தம் இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும். அவர்களுக்கு தனி நடைமுறைகள் உள்ளது. பணம் பிடிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா நடைபெறும் பகுதிகள், பெரிய அளவிலான பணம் பிடிக்கப்படும் பகுதிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.
அனைத்து வருமான வரிச்சோதனைகளும் தேர்தல் தொடர்புடையதானதா என்பதை பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வாக்குபதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை வெளியிடலாம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியிடலாம்’ என்று தெரிவித்தார்.