தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்வு செய்வற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் 3 எம்பிகளும், அதிமுக சார்பில் 3 எம்பிகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக தனது கூட்டணிக் கட்சியான மதிமுகவிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் வைகோவின் வேட்பு மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து, 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாக உள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோ போட்டியிடுவதால், திமுகவின் கூடுதல் வேட்பாளரான என்.ஆர். இளங்கோ அவரது வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறார்.