Home /News /tamil-nadu /

209-வது தேர்தல்... உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ’தேர்தல் மன்னன்’ பத்மராஜன்...!

209-வது தேர்தல்... உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ’தேர்தல் மன்னன்’ பத்மராஜன்...!

  • News18
  • Last Updated :
    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் மாவட்ட கவுன்சிலர் 3 வது வார்டு கூணான்டியூர் பகுதிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருக்கு 209-வது தேர்தலாகும்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்(60). இவர் கனரக வாகனங்களின் டயர்களை வல்கனைசிங் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஸ்ரீஜா, மகன் ஸ்ரீஜேஷ் உள்ளனர்.

    இவர் கின்னஸில் இடம் பெற வேண்டி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இதில் வார்டு கவுன்சிலர் பதவி முதல் குடியரசுத்தலைவர் தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் தமிழக மற்றும் இந்திய அளவிலான தலைவர்களை எதிர்த்தும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    இவர் கடந்த மாதம் 25 -ம் தேதி கர்நாடக ராஜ்ய சபா இடைத்தேர்தலுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த அவர், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் சேலம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேலிடம் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இது அவருக்கு 209 -வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankar
    First published:

    Tags: Local Body Election 2019

    அடுத்த செய்தி