வேலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.9.60 லட்சம் பறிமுதல்!

பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

news18
Updated: April 17, 2019, 10:38 AM IST
வேலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.9.60 லட்சம் பறிமுதல்!
கோப்புப் படம்
news18
Updated: April 17, 2019, 10:38 AM IST
நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாக்களைக் கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்துக்கொண்ருந்தது. அப்போது, 9,60,000 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கவரப்பாளையம் அருகே மக்களவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜீவநாதன் என்பவர், பணம் கொடுப்பதைக் கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்த 8,00,500 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதே போல ஆற்காடு நகரத்திலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் சோதனையிட்ட பறக்கும் படையினர் சண்முகம் என்பவரிடமிருந்து 1,59,500 ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.பணத்தைப் பறிமுதல் செய்ததோடு அவர்களையும் அந்தந்த காவல் நிலையங்களில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

தற்போது காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Watch :  வேலூரில் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் 

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...