ஈரோடுட்டில் ரூ.10.39 லட்சம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கியது

Youtube Video

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 10,39,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக திருச்சி மாவட்டம் திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்பவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் டிராக்டர் வங்குவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். அவரை மறித்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 97,0000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

  இதே போன்று வடுகபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை மறித்தனர். அதில் கேரளாவை சேர்ந்த சித்திக் என்பவர் கோபிச்செட்டிப்பாளையம் விவசாயியிடம் வாழைத்தார் வாங்க எடுத்துச் சென்ற 69000 ரூபாயை உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

  மேலும் படிக்க.... மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? முழு விபரம் இங்கே..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: