மதுரையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91,000 பறிமுதல்

மதுரையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91,000 பறிமுதல்

மாதிரி படம்

மதுரையில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 91,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியில் தாசில்தார் சரவணப்பெருமாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சித்தேஷ் குமார் என்ற 34 வயது நபரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் ஆவணங்கள் இன்றி 91,400 ரூபாய் ரொக்கப் பணத்தை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  சித்தேஷ் குமார் கருப்பாயூரணி பகுதியில் பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருவதாகவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்களை ஆட்சியரிடம் காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: