திருவாரூரில்18 கிலோ தங்கம், ரூ.17 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருவாரூரில்18 கிலோ தங்கம், ரூ.17 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தேர்தல் பறக்கும் படையினர்

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி 18 கிலோ தங்கம் மற்றும் ரூபாய் 17 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  திருவாரூரில் தேர்தல் பறக்கும் படையினரனால் 18 கிலோ தங்கம் மற்றும் ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர், காவல்துறையினரின் உதவியோடு வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

  இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தஞ்சை மாவட்ட எல்லையான பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் முடிவு பகுதியான தம்பிக்கோட்டை காவல்துறை சோதனைச்சாவடியில் துணை இராணுவப் படையினர் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இரண்டு கிலோ தங்க நகைகள் உள்ளதாக வாகனத்தில் இருந்த தினேஷ் என்பவர் கூறியுள்ளார்.

  தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதில் கூடுதலாக உரிய ஆவணம் இன்றி தங்க நகைகள் இருப்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் வாகனத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி 18 கிலோ மற்றும் 350 கிராம் எடையுள்ள தங்க நகைகள் வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

  காவல் துறையினரின் சோதனையைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பறக்கும் படையினரிடம் வாகனத்துடன் தங்கநகைகள் ஒப்படைக்கப்பட்டன. திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தங்க நகைகளை எடுத்து வந்தவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தினேஷ் என்பதும் அவர் தங்க நகைகளை ஆபரணமாக செய்து விற்பனை செய்து வருபவர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து உரிய அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் இதே போல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஆலங்காடு சோதனை சாவடி பகுதியில் ஐசிஐசிஐ தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ தனியார் வங்கிகளின் கிளைகளுக்கு கொண்டு செல்வதற்காக பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்ட பணம் என தெரியவந்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: