முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ் - ப.சிதம்பரம் விமர்சனம்

தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ் - ப.சிதம்பரம் விமர்சனம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

வேளாண் சட்டம் வாபஸ் விவசாயிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேர்தல் பயத்தின் காரணமாக பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையில், “ நாடு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இந்தச்சட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் தவறான தகவல் பரவி விட்டது.

விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை . அவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் புரிய வைக்க முயற்சித்தோம் பலனளிக்கவில்லை. எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம். வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்தை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும்” என்றார்.

Also Read: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு - பிரதமர் நரேந்திர மோடி

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பயத்தின் காரணமாக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார். எனினும் விவசாயிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.இந்த முடிவின் பொருள் பா.ஜ.க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

Also Read: விவசாயிகளின் தியாகம் அழியாது - பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

இடைத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பாஜக அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Agricultural act, Agriculture, BJP, Congress, Farm laws, Farmers, Modi, P.chidambaram, PM Modi