ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்றே கடைசி.. வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு

இன்றே கடைசி.. வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு

வாக்காளர் முகாம்

வாக்காளர் முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் பெயருடன் இணைக்க ஆதார் எண்ணை அளிக்கலாம். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 9ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது. வாக்காளர்கள் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 12, 13ம் தேதிகளிலும், நேற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் சிறப்பு முகாம் நிறைவடைகிறது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம்.  வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் பெயருடன் இணைக்க ஆதார் எண்ணை அளிக்கலாம்.

இதையும் படிங்க: மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

2023 ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களும், பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்க இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கேட்டுக் கொண்டுள்ளார்.

First published:

Tags: Election Commission, Voter List