உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

  அதன்படி உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என பேசியதாக புகார்கள் எழுந்தன.

  இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

  Must Read : கொரோனா கவச உடை அணிந்து ஜனநாயக கடமையாற்றிய கனிமொழி

   

  இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: