தமிழகத்தில் 118 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தமாக 272 தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு...

 • Share this:
  சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தமாக 272 தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றுள் தமிழகத்தில் மட்டும் 118 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தலா ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வேட்பாளர்களின் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கண்காணிப்பார்கள் என்றும் கூறியுள்ளது.

  2017 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் 2021-ல் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலின்போது நடத்தப்பட்ட ஆய்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கண்க்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி: கனடாவில் வைக்கப்பட்ட மிகப்பெரிய நன்றி பலகை

   

  புதுச்சேரியில் 30 தொகுதிகளும் பணப்பட்டுவாடா நடைபைற வாய்ப்புள்ள தொகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மேற்கு வங்கம் மாநிலத்த்தில் 47, அசாமில் 52, கேரளாவில் 25 தொகுதிகள் ஆகியவை அதிக பணப்பட்டுவாடாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: