தமிழகத்தில் 12.9 லட்சம் பேர்: 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 12.9 லட்சம் பேர்: 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

மாதிரிப்படம்

தமிழகத்திலுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • Share this:
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா கடந்த 26-ம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பின்போது கொரோனா பாதிப்பின் காரணமாக விருப்பம் உள்ள 80 வயதைக் கடந்தவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்க வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் பதிலளித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகு, ‘80 வயதைக் கடந்தவர்களின் விவரப்பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமைக்கு மாறானது. எனவே, அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட பட்டியலை கொடுக்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்திலுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 80 வயதைக் கடந்தவர்கள் வாக்காளர்கள் 12,91,132 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,08,718 பேர் உள்ளனர். கோயம்புத்தூரில் 64,755 பேரும், திருப்பூரில் 61,272 பேரும், சேலத்தில் 61,728 பேரும் உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 பேர் உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: